30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

💇‍♀️ லுக்ஸ் சலூன் (LOOKS Salon) – கோலாலம்பூரில் பிரம்மாண்ட தொடக்கம்!

செய்தி / படங்கள்: எம்.முருகன்
பிரிக்பீல்ட்ஸ் சென்ட்ரல் சூட்ஸ் (Sentral Suites, Brickfields) முதல் மாடியில் லுக்ஸ் சலூன் (LOOKS Salon) திறப்பு விழா அண்மையில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.

நிகழ்விற்கு முன்னாள் மனிதவள அமைச்சர் மற்றும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார், மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என். கோபால கிருஷ்ணன், மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார், அம்மன் மெஸ் உணவக நிர்வாக இயக்குனர் டத்தோ குமார், கேவிடி தங்க மாளிகை குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் தங்கத்துரை, LOOKS சலூன் நிர்வாக இயக்குனர் மகா கணேஷ், மலேசிய சிகை அலங்கார சங்கத் தலைவர் ராஜசேகரன் மற்றும் திருமதி மகேஸ்வரி உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ் பாரம்பரிய மேளதாளத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, தேசிய கீதத்திற்குப் பின் திருமதி மகாஸ்வரி குத்துவிளக்கு ஏற்றினார். அதன் பின்னர் புகழ்பெற்ற கலைஞர் Alleycats ஆறுமுகம் தன் தனித்துவ பாணியில் பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தார்.

மகா கணேஷ், “முதல் முறையாக மலேசியாவில் LOOKS சலூன் கிளையை திறந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட பிரபலமான Unisex Hair & Beauty பிராண்டான LOOKS, இப்போது கோலாலம்பூரில் உலகத் தரச் சேவைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் நேரடியாக வருகை தந்து தங்களுக்கு ஏற்ப முக அலங்காரம், சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபால கிருஷ்ணன் மேலும், “Unisex Hair & Beauty துறையில் சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இளைஞர் மகா கணேஷ் இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருப்பது பெருமைக்குரியது. நம்முடைய இளைஞர்களும் துணிந்து இதுபோன்ற துறைகளில் பங்கு கொள்ள வேண்டும்.

இந்தத் துறைக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வலுவான ஆதரவு இருக்கும்” எனக் கூறினார். இந்நிகழ்வில் ஏழை மாணவர்களுக்கு அன்பளிப்பும், அதிஷ்ட குலுக்களும் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles