25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🏛️ செந்தூல் மகா காளியம்மன் ஆலயத்திற்கு அரசு அங்கீகாரம் – நிலப் பட்டா வழங்கப்பட்டது!

🔥 Views : 10
👁 Reading Now : 51

கோலாலம்பூர் செந்தூலில் பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆன்மிகத் தளமாக இருந்து வந்த மகா காளியம்மன் ஆலயம், இப்போது அதிகாரப்பூர்வமாக அரசாங்க அங்கீகாரம் பெற்று நிலப் பட்டா பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு, நேற்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் ஆலயத்தில் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

பிரபாகரன் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது:
“இவ்வாலயம் என் தாத்தா பாட்டி காலத்திலிருந்து இருந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர். கடந்த பத்து மாதங்களாக கோவில் நிர்வாகத்தினருடன் சேர்ந்து அரசாங்கத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பலனாக இன்று அரசாங்க கேசட் செய்து முறையான நிலப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது எனக்கு மட்டும் மகிழ்ச்சி அல்ல, ஆலயத்திற்கும் பக்தர்களுக்கும் பெரும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தியாகும். கோவில் நிர்வாகம் முறையான ஆவணங்களை வைத்திருந்ததன் பலனாக இந்நாளில் இந்த பட்டா கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.” என அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம், விரைவில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத் திருவிழா சிறப்பாக நடைபெற வழி அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles