
கோலாலம்பூர் – நடிகரும் இயக்குநருமான தனுஷ், அருண்விஜய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம், மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.
இத்திரைப்படம் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய அளவிற்கு அற்புதமாக இயக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
🎬 இயக்குநர் தனுஷ்:
“அனைவரும் திரையரங்குகளில் நேரடியாக வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
🎥 மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக்:
“மலேசியாவில் தரமான இந்திய திரைப்படங்களை கொண்டு வருவது எங்கள் மகிழ்ச்சி. தனுஷ் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
✨ இதன் சிறப்பு காட்சி TRX திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகமான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்வு திரையரங்கு விழாவைப் போல இருந்தது.
