29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலேசிய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு ; உலகத்தர பயிற்சி வழிவகை!

🔥 Views : 11
👁 Reading Now : 58

B40 மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கும் நோக்கில் DHS Hospitality Academy மற்றும் Pertubuhan Amal Uncle Kentang Malaysia இணைந்து மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு RM 1.3 மில்லியனுக்கு மேல் ஆகும். இதன் மூலம் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மலேசிய இளைஞர்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத்துறையில் தொழில்முறை பயிற்சி பெறவுள்ளனர். மலேசியாவில் மிகவும் பிரபலமான DHS Hospitality Academy நிறுவனம் இதற்கான வழிமுறைகளை காட்டுகிறது என அதன் தலைவர் டாக்ரட். எஸ். ஸ்ரீகுமார் கூறினார்.

UK-DHS சிங்கப்பூர் இணைப்பு பயிற்சி திட்டம் மூலம் ஆண்டு தோறும் 100 இளைஞர்கள் ஆறு மாதங்களுக்கு பங்கேற்பர். பாதி நிதியுதவி கொண்ட இத்திட்டத்தில் மாதம் SGD 650 முதல் SGD 1,100 வரை கொடுப்பணவு, வாசிப்பிடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படுகின்றன.

முழு நிதியுதவியுடன் நடைபெறும் UK-DHS இன்டர்ன்ஷிப் வேலைநிலை திட்டம் மூலம் ஆண்டு தோறும் 25 இளைஞர்கள் 15 மாதங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி மற்றும் சுற்றுலாத்துறையில் டிப்ளோமா படிப்பைப் பெறுவர்.

மலேசியாவில் நடைபெறும் ஹோட்டல் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் வழி 97 இளைஞர்கள் 12 மாத பயிற்சியைப் பெறுவர். மாதம் RM 700 கொடுப்பணவு, வாசிப்பிடம், உணவு மற்றும் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.

இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு உலகளாவிய வேலை அனுபவத்தை வழங்கி, உள்ளூர் திறமையை மேம்படுத்தி, வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சார்பை குறைக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாக DHS Hospitality Academy தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles