30.3 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

நிருபர் முருகனின் மருத்துவச் செலவிற்கு டத்தோஸ்ரீ எம். சரவணன் உதவ முன்வந்தார்!

🔥 Views : 19
👁 Reading Now : 67

நிருபர் முருகனின் மருத்துவச் செலவுகள் குறித்து சங்கத்தின் சார்பில் துணைத் தலைவர் காளிதாசன் தியாகராஜன், உதவித் தலைவர் காளிதாசன் இளங்கோவன், செயலாளர் வெற்றி விக்டர், மற்றும் செயலவை உறுப்பினர் பவலச்செல்வன் ஆகியோர் மஇகா துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில், முருகனின் மருத்துவச் சிகிச்சைக்காக பண உதவி வழங்குவதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் உறுதியளித்தார்.

தற்போது நாங்கள் முருகனுக்காக நிதி திரட்டிவருகிறோம் என்று தெரிவித்தபோது, மேலும் எவ்வளவு தேவை என்பதை அறிந்து கூடுதலாக உதவ முன்வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles