
திராவிட மாடல் அரசால் பயன் பெறாத வீடுகளே தமிழகத்தில் இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
திராவிட மாடல் அரசால் பயன்பெறாத வீடுகளே தமி ழகத்தில் இல்லை என்ற அள வுக்கு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டுள்ளன. மகளிர் விடியல் பயணத் திட்டம் மூலம் 830 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். சிவ கங்கை மாவட்டத்தில் மட்டும் 11 கோடி பயணங்களை மேற் கொண்டுள்ளனர். பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 45,000 பேர் பயன்பெறுகின்றனர். கல்லூரி மாணவர்கள் 8 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 16,000 பேர் பயன்பெறுகின்றனர். மற்ற மாநில முதல்வர்கள் பாராட்டும் அளவுக்கு தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கை அடைந்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 2.40 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். கடந்த நான்கரை ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனின் கோரிக்கையை ஏற்று, கோட்டையூரில் ரூ.1 கோடி யில் சர்வதேச தரத்தில் கால் பந்து விளையாட்டுக்கான புல் மைதானம் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
8,500 பேருக்கு ரூ.89 கோடி நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார். மேலும், ரூ.3 கோடியில் மானாமதுரை மாங்குளத்தில் சிறுவிளையாட்டரங்குக்கு அடிக்கல் நாட்டியதோடு, ரூ.1.78 கோடியில் 23 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

