
இளைஞர் வளர்ச்சியும் ஹாஸ்பிட்டாலிட்டி பயிற்சியிலும் முன்னணி நிறுவனமாக உள்ள DHS Hospitality Academy, தனது துணை நிறுவனமான Akademi Daya Hospitaliti Siswa (ADHS) மூலம் நாட்டளவிலான இளைஞர் திட்டங்களை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இது மலேசிய இளைஞர்களுக்கு வேலைத் திறன்கள், தொழில் அனுபவம் மற்றும் நிலையான வேலை வாய்ப்பு பாதைகள் உருவாக்கும் அகாடமியின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
2016ஆம் ஆண்டு நிறுவப்பட்ட DHS Hospitality Academy, மலிவு செலவில், எளிதில் அணுகக்கூடிய மற்றும் தாக்கம் செலுத்தக்கூடிய கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. Domino’s Malaysia, Sushi Kin, Segi Fresh, MAWSPA, KLCC போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து Career Work Skills Program உருவாக்கப்பட்டது. 2017 – 2020 காலகட்டத்தில் MIHRM உடன் இணைந்து இளைஞர்களுக்கான வேலைத் திறன் மேம்பாட்டில் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது.
சமூக முன்னேற்ற திட்டங்களின் விரிவாக்கம்
2023ஆம் ஆண்டு, பெண்கள், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், இளைஞர் விளையாட்டு வீரர்கள், மூத்த பௌரணிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ‘second-chance youth’ போன்ற underserved communities-ஐ ஆதரிக்க Hospitality Community Entrepreneurship Program தொடங்கப்பட்டது.
YAKEB, National Cancer Society Malaysia, Malaysian Tourism Council, Paralympic Council of Malaysia உள்ளிட்ட அமைப்புகளுடன் கூட்டாண்மை மூலம் சமூக தாக்கம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
ADHS – இளைஞர்களுக்கான தனி நிறுவனமாக
விரிவடையும் திட்டங்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்க DHS நிறுவனம் Akademi Daya Hospitaliti Siswa (ADHS)– ஐ உருவாக்கியது.
ADHS-ஐ Puan Shahidah Jackson வழிநடத்தி, நாடு முழுவதும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் தரத்தைக் கண்காணிக்கிறார்.
பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்
- HOPE Program: Hospitality Operations Preparation Education
- TRADE Skills Program: ஆரம்பகட்ட தொழில் திறன் பயிற்சி
SPMக்கு பிந்தைய திட்டங்கள்
- SKI CAP (Basic): முழு ஸ்பான்சருடன் Hospitality Certificate
- SKI CAP (Plus): Diploma மாணவர்களுக்கு Degree Pathway ஸ்பான்சர்
- Uncle Kentang Internship Program: 5-Star ஹோட்டல்களில் 12 மாத பயிற்சி
- TALENT SPARK: 5 நாள் பயிற்சியுடன் நேரடி வேலை வாய்ப்பு
- BELIA Generasi: 2 நாள் வேகமான பயிற்சி மற்றும் உடனடி பணி நியமனம்
மலேசிய இந்திய இளைஞர்களுக்கான YUVA NIRMAN – டிஜிட்டல் மேம்பாட்டு திட்டம்
PROPPY APP உடன் இணைந்து DHS நிறுவனம் YUVA NIRMAN திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நோக்கம்:
- டிஜிட்டல் கல்வி
- டிஜிட்டல் தொழில் தொடங்குதல்
- வருமான உருவாக்கம்
- மலேசிய இந்திய இளைஞர்களுக்கான தொழில் வளர்ச்சி
2026 – பள்ளிகளுக்கான இலவச திட்டங்கள் & ஆசிரியர் மேம்பாடு
2026 கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக DHS, நாடு முழுவதும் DHS Hospitality Club– ஐ தொடங்குகிறது.
இந்த கிளப்பின் மூலம் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படும்:
மாணவர்களுக்கான இலவச விழிப்புணர்வு திட்டங்கள்
- போதைப் பழக்க தடுப்பு
- பழிவாங்கல் & கேலிசெய்தல் எதிர்ப்பு
- மோசடி (Scam) தடுப்பு
- பாலியல் தொல்லை விழிப்புணர்வு
- உணர்ச்சி & சமூக நலன்
ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாடு
- கல்வி தலைமைத்துவ பயிற்சி
- Active Learning
- NLP for Teaching
- கல்வியில் AI பயன்பாடு
- மாணவர் ஆலோசனை மேலாண்மை
- புதிய தலைமுறை மாணவர்களை கையாளுதல்
மேலும், ஆசிரியர்களுக்காக MQA அங்கீகரித்த MBA திட்டமும் முழு ஸ்பான்சருடன் வழங்கப்படுகிறது.
Dr. S. Sri Kumar – ஒரு முன்னோடியின் பார்வை
இந்த விரிவாக்கம் DHS Hospitality Academy நிறுவனர் டாக்டர் எஸ். ஸ்ரீ குமார் அவர்களின் பார்வையை பிரதிபலிக்கிறது.
“இளைஞர்களை பயிற்சி பெறச் செய்வது மட்டுமல்ல,
அவர்கள் மரியாதை, தன்னிறைவு, மற்றும் வாழ்நாள் வாய்ப்புகளுடன் முன்னேற வழிகட்டுவது எங்கள் நோக்கம்,”
என டா. எஸ். ஸ்ரீ குமார் தெரிவித்தார்.
“ADHS மற்றும் புதிய திட்டங்களின் மூலம், ஒவ்வொரு மலேசிய இளைஞருக்கும் முன்னேறும் வாய்ப்பை உருவாக்குகிறோம்.”
DHS Hospitality Academy பற்றி:
2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட DHS Hospitality Academy, மலேசிய இளைஞர்களுக்கான தரமான மற்றும் தொழில் சார்ந்த ஹாஸ்பிட்டாலிட்டி பயிற்சியை வழங்குகிறது. Puan Shahidah Jackson தலைமையிலான ADHS மூலம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தில் DHS தனது பங்களிப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
