26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

உள்ளூர் கலைஞர்களின் கலாச்சார கலை இரவு மெந்தகாப்பில் சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 13
👁 Reading Now : 44

மெந்தகாப்பில் உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் அமைந்த கலாச்சார கலை இரவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்ற இந்த மாலைக் கொண்டாட்டம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.

இந்நிகழ்ச்சிக்கு மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி அனிதா குமாரி ஆதரவு வழங்கினார். சிறப்பு விருந்தினராக டத்தோ மோகன் கிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருக்கு ஏற்பாட்டுக்குழுவினரால் சிறப்பு கவுரவமும் வழங்கப்பட்டது.

மேலும், பிரபல கலைஞர்களான சகலகலா வல்லவன் ராஜா, பாடகி வனஜா மற்றும் பலர் தங்கள் நிகழ்ச்சிகளால் மேடையை கலக்கியதுடன், கலை இரவின் சிறப்பை மேலும் உயர்த்தினர்.

உள்ளூர் திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles