26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

Fast Tech நிறுவனத்தின் பிரதான தண்ணீர் பந்தல்!

எதிர் வரும் பத்து மலை தைப்பூச திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் Fast Tech Security Services group of companies நிறுவனம் பிரதான தண்ணீர் பந்தல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது.
தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வெள்ளி ரத ஊர்வலத்துடன் வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் என Fast Tech Security Services group of companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு கம்பையா கூறினார்.
இந்த பிரதான தண்ணீர் பந்தல் 3 ஆவது மைல் எண் 230 ஜாலான் ஈப்போ, கோலாலம்பூரில் அமைக்கப்படுகிறது என்றார் அவர்.
ரத ஊர்வலத்துடன் வரும் பக்தர்களுக்கு சைவ உணவு, பொங்கல், குளிர்பானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் பக்தர்கள் உட்கார்ந்து களைப்பாற மேடை அமைக்கப்பட்டு, பிரபல மலேசிய உள்ளூர் கலைஞர்களின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.


இந்த கலை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு தலைவரும் பிரபல பாடகருமான எஸ். கிருஷ்ணன் தலைமையில் சங்கர் ஷான், அன்பழகன், அம்பிகா, மகேஸ்வரி, ராமச்சந்திரன், வசந்தி தங்களின் படைப்புகளை வழங்குவர்.
இந்த நிகழ்ச்சியில் சிவநேசன் அறிவிப்பாளராக பங்காற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி,பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின், டத்தோ கோகிலன் பிள்ளை ஆகியோர் கலந்து கொள்வர்.
Fast Tech Security Services நிறுவனத்தின் இயக்குனர்கள் டத்தோ ஷாமிளா ஷா, சுக்ரி, டத்தோ மகேந்திரன் மற்றும் நிறுவனத்தின் பிரிவு நிர்வாகிகள் டத்தோ செல்வகுமார், தீபன், லோகன், தயாபரன்,தியாகராஜன் மற்றும் டத்தோ பாலா ஆகியோர் கலந்து கொள்வார்கள்.


இந்த தண்ணீர் பந்தல் கொண்டாட்ட நிகழ்வில் சுமார் 2,000 பேருக்கு சைவ உணவு வழங்கப்படும் என டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
வரும் ஜன 30 ஆம் தேதி சுமார் இரவு 9 மணிக்கு ஜாலான் பாண்டாரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் வெள்ளிரதம் தலைநகரில் உள்ள சாலைகளை கடந்து, ஜாலான் ஈப்போ வழி பத்து மலை வளாகத்தை சென்றடையும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles