32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர் சங்க குடும்ப தின விழா!

🔥 Views : 11
👁 Reading Now : 36

மலேசிய தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா செங்கையா மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டத்தோஸ்ரீ சரவணன் தலைமை தாங்கி கலந்து கொண்டார்.

மேலும், மாண்புமிகு பாப்பாராயிடு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சங்கத்தின் தேசிய தலைவர் முத்தமிழ் மன்னன் சிறப்பு செய்து நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவில் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றி வரும் புகைப்படக் கலைஞர் ரவி முனியாண்டி அவர்களுக்கு, அவரின் சேவையை பாராட்டி சங்கத்தின் சார்பில் சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டது.

அப்போது ரவி முனியாண்டி பேசுகையில்,
“சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கும், சங்கத் தலைவர் முத்தமிழ் மன்னனுக்கும், தமிழ் நேசன் பணியாளர்களுக்கும் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கிய தயாளன் மற்றும் என்னுடன் பணிபுரியும் சரளா அக்கா உள்ளிட்ட சக பணியாளர்களுக்கும் நன்றி,” என்றார்.

இந்த குடும்ப தின விழா, ஊடகத்துறையினரின் ஒற்றுமையையும், அவர்களின் பங்களிப்புகளையும் கௌரவிக்கும் வகையில் மகிழ்ச்சிகரமான சூழலில் நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles