
இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாக PMG GLOBAL RESOURCES பாதுகாப்பு கருவிகளை பொருத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் ஷா ஆலமை சேர்ந்த குணாளன் பொன்னுசாமி கூறினார்.
பதவி ஓய்வுக்குப் பின் கடந்த 3 ஆண்டுகளாக சொந்தமாக இந்த நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கடந்த 22 ஆண்டுகளாக Safeguards security system Sdn Bhd நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக தாம் பணியாற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனத்தில் மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தான் எங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் என்றார் அவர்.
வங்கிகளில் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை மணி ஆகியவற்றை பொருத்துவது இந்த நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் ஒன்று என அவர் சுட்டி காட்டினார்.
இந்த நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இது தொடர்பான சொந்த தொழிலை வீட்டிலிருந்து தாம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பாதுகாப்பு கருவிகளை பொருத்தும் சேவையில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த இடங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை மணி மற்றும் நுழைவு கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும் சேவைகளை தாம் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது உலகமே செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி சென்று கொண்டிருப்பதால், இந்த பயிற்சியில் கலந்து கொண்டு அதிக தகவல்களை தெரிந்து கொள்ள தாம் விருப்பம் கொண்டுள்ளதாக குணாளன் குறிப்பிட்டார்.
