26.4 C
Kuala Lumpur
Friday, May 1, 2026

Vetri

📰 தொழிலாளர் தினம்: உழைப்பாளர்களின் நலன் முன்னிலை – டாக்டர் குணராஜ்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ், தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,
“செலங்கோரின் கம்பீரமான கட்டிடங்களும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தொழிலாளர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் காரணமாகவே உருவாகியுள்ளன. இந்த வளர்ச்சி வெறும் பொருளாதார எண்களில் மட்டுமே பிரதிபலிக்காமல், அதன் பயன்கள் அடித்தட்டு தொழிலாளர்கள் வரை சமமாகச் சென்றடைய வேண்டும்,” என்றார்.

மேலும்,
👉 குறைந்தபட்ச ஊதிய உயர்வு
👉 ‘கிக்’ தொழிலாளர்களுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு

போன்ற நடவடிக்கைகள், தொழிலாளர் நலனில் அரசாங்கத்தின் உறுதியான அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

“நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ‘கிக்’ தொழிலாளர்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்படுவது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.


“தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்,” எனக் கூறி அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர் தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles