
வரும் ஜூன் 1 முதல் புதிய தலைமுறை MyKad அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், தற்போதைய MyKad வைத்திருப்பவர்கள் அனைவரும் உடனடியாக அடையாள அட்டையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்ததாவது,
👉 12 வயதை எட்டிய ஒவ்வொரு மலேசியரும் MyKad வைத்திருப்பது மட்டுமே கட்டாயம்
👉 ஏற்கனவே MyKad வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் புதிய அட்டைக்கு மாற வேண்டும் என்ற விதிமுறை இல்லை
என்று விளக்கமளித்தார்.
புதிய தலைமுறை MyKad-இன் முக்கிய நோக்கம், நாட்டின் அடையாள ஆவண பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதாகும். அதற்காக உலகத் தரத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் MyKad பயன்படுத்துகின்றனர். ஆகவே, ஜூன் 1 அன்று அனைவரும் ஒரே நேரத்தில் தேசியப் பதிவுத்துறைக்கு செல்ல வேண்டாம். மக்கள் படிப்படியாக மாற்றிக் கொள்ளலாம்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.



