
சைபர்ஜெயாவில் நடத்தப்பட்ட அதிரடி ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸகரியா ஷாபான் தெரிவித்ததாவது, பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்கள் மற்றும் ஒரு வார கால உளவுத்துறை கண்காணிப்பின் பின்னர், புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் மெனாரா பரகன் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தி தங்கவைத்ததாக சந்தேகிக்கப்பட்ட:
👉 உணவகங்கள்
👉 மளிகைக் கடைகள்
👉 விற்பனை மையங்கள்
👉 வணிக வளாகங்கள்
உள்ளிட்ட மொத்தம் 16 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையில்,
👉 105 வெளிநாட்டவர்கள்
👉 89 மலேசியர்கள்
சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 முதல் 35 வயதுக்குட்பட்ட 13 வெளிநாட்டவர்கள் குடிநுழைவு சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்:
🇸🇩 சூடான்
🇮🇳 இந்தியா
🇵🇰 பாகிஸ்தான்
🇳🇵 நேபாளம்
🇲🇲 மியான்மார்
🇮🇩 இந்தோனேசியா
நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



