
குளோபல் சுமுத் புளோட்டிலா 2.0 மனிதாபிமானப் பணியில் பங்கேற்றபோது இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 மலேசியர்கள் பாதுகாப்பாக துருக்கியின் இஸ்தான்புல் நகரை வந்தடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்துலக கடல் பகுதியில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலிய அதிகாரிகளால் இந்த 29 மலேசியர்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.45 மணியளவில் இஸ்தான்புல் நகரை பாதுகாப்பாக வந்தடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
“அனைவரும் தற்போது நலமாக உள்ளனர். இருப்பினும், ஐந்து ஆண்கள் உட்பட ஆறு பங்கேற்பாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் அவசியமாக உள்ளன,” என்று அவர் வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மலேசிய அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



