30.1 C
Kuala Lumpur
Thursday, June 4, 2026

Vetri

🌺 தந்தை-தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்திய தொழிலதிபர் டான்ஸ்ரீ ரேனா துரைசிங்கம்!

🔥 Views : 3,849
👁 Reading Now : 53

மலேசியாவின் பிரபல தொழிலதிபரான டான்ஸ்ரீ ரேனா துரைசிங்கம் மற்றும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ கோமதி ஆகியோர் அண்மையில் தமிழ்நாட்டின் திருப்பத்தூருக்கு வருகை தந்தனர். இந்த பயணத்தின் போது, அங்கு அமைந்துள்ள தங்களது தந்தை மற்றும் தாயாரின் சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், சிறப்பு பூஜைகளையும் நடத்தினர்.

குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், மறைந்த பெற்றோரின் நினைவுகளை போற்றும் வகையில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களது வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் சாதனைகளுக்கும் அடித்தளமாக இருந்த பெற்றோரின் ஆசீர்வாதங்களை நினைவுகூர்ந்து, அவர்களின் சமாதியில் அஞ்சலி செலுத்தியதாக டான்ஸ்ரீ ரேனா துரைசிங்கம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக குடும்பத்துடன் பணியாற்றி வரும் அவர்களது கார் ஓட்டுநரான கங்காதரனின் பிறந்தநாளும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி அவரது பிறந்தநாள் மகிழ்ச்சியுடன் அனுசரிக்கப்பட்டது.

நீண்ட காலமாக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்து வரும் கங்காதரனின் பங்களிப்பை பாராட்டும் வகையில் அவருக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு குடும்ப பாசம், நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அருமையான தருணமாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles