
மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில், “முத்தமிழ் சான்றோர்களை வந்தனம் செய்வோம்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பாராட்டு விழா பிரிக்பீல்ட்ஸ் கண்பார்வையற்றோர் சங்க அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாட்டிற்கும் மக்களுக்கும் விலைமதிப்பற்ற சேவையாற்றிய முன்னணி வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன் மற்றும் கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாபன் ஆகிய இரு மாபெரும் பெண் ஆளுமைகளுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
விழாவில் தங்களின் நீண்டகால சட்டத்துறைப் பயணம் மற்றும் சமூகப் போராட்ட சவால்களைப் பகிர்ந்து கொண்ட இவர்கள், இளைய தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் வகையில் உரையாற்றினர். இறுதிப் பகுதியில் பொதுமக்கள் பங்கேற்ற சுவாரசியமான கலந்துரையாடலும் கேள்வி-பதில் அங்கமும் நடைபெற்றது.
வழக்கறிஞர் மதியழகன், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் அ. வைத்திலிங்கம் உள்ளிட்ட பல சமூகப் பிரமுகர்களும், தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்



