28.7 C
Kuala Lumpur
Thursday, July 2, 2026

Vetri

🍛 RM25 நாசி லெமாக்! ஜொகூர் உணவகத்தின் விலை சமூக வலைத்தளங்களில் விவாதம்

🔥 Views : 4,511
👁 Reading Now : 26

உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் விரும்பி சுவைக்கும் மலேசியாவின் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பெறுவது நாசி லெமாக். பலரின் அன்றாட காலை உணவாக விளங்கும் இந்த உணவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தற்போது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு உணவகத்தில் நாசி லெமாக் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், அந்த உணவகத்தின் நாசி லெமாக் விலைப்பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதன்படி, சாதாரண நாசி லெமாக் RM4.50-க்கு விற்கப்படுவதுடன், கூடுதல் உணவுப் பொருட்களைச் சேர்த்தால் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், “Nasi Lemak Special” என்ற பெயரில் வழங்கப்படும் உணவு RM25-க்கு விற்பனை செய்யப்படுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விலையைப் பற்றி பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

சிலர், தற்போதைய சந்தை நிலவரத்தைப் பொருத்தவரை அந்த விலை நியாயமானதே என்றும், தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் அதிக விலை இயல்பானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்பினர், வாடிக்கையாளர்கள் அதிக விலையை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், அது விற்பனையாளர்கள் விலையை மேலும் உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles