29.2 C
Kuala Lumpur
Monday, July 6, 2026

Vetri

“இது எனது கடைசி உலகக் கோப்பை” – உணர்ச்சிவசப்பட்ட ரொனால்டோ அறிவிப்பு

🔥 Views : 4,500
👁 Reading Now : 44

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பைத் தொடர் தனது கடைசி உலகக் கோப்பை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயினுக்கு எதிரான 16-வது சுற்றுப் போட்டிக்கு முன்னதாக டல்லாஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய 41 வயதான ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் ஆறாவது முறையாக விளையாடும் வீரராக புதிய சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பை எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கட்டும். நாளைய போட்டி மட்டும் எனது கடைசி போட்டியாக இருக்கக் கூடாது என்று நம்புகிறேன்,” என்று அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

தனது கால்பந்து வாழ்க்கையை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தானே தீர்மானிப்பேன் என்றும், யாருடைய அழுத்தத்திற்கும் இடமளிக்க மாட்டேன் என்றும் ரொனால்டோ கூறினார்.

நான் விரும்பும் நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். கால்பந்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன். இது எனக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் இருந்த ஒரு பேரார்வம். நாட்டிற்காக விளையாடுவதையும் கால்பந்து விளையாடுவதையும் நான் மிகவும் நேசிக்கிறேன்,” என்றார்.

மேலும், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கட்டாய அழுத்தத்தை தன் மீது ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும், ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இந்த உலகக் கோப்பையில் நான் மோசமாக விளையாடவில்லை. இதுவரை மூன்று கோல்கள் அடித்துள்ளேன். சிலர் என்னைவிட சிறப்பாக விளையாடியிருக்கலாம். ஆனால் எனது செயல்பாட்டில் நான் திருப்தியாக இருக்கிறேன்,” என்று ரொனால்டோ கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles