33.5 C
Kuala Lumpur
Wednesday, July 8, 2026

Vetri

லாபு 4 தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமான பணிக்கு 20 லட்சம் மானியம் வழங்கிய பிரதமருக்கு நன்றி – அருள் குமார்

🔥 Views : 2,287
👁 Reading Now : 23

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள லாபு 4 தோட்டத் தமிழ்ப்பள்ளி இப்போது 90 லட்சம் வெள்ளியில் மிகவும் கம்பீரமாக கட்டப்பட்டவுள்ளது.

மடானி அரசாங்கம் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் லாபு 4 தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டுமான பணிக்கு 20 லட்சம் வெள்ளி மானியத்தை வழங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் தெரிவித்தார்.

லாபு 4 தமிழ்ப்பள்ளிக்காக நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் வழங்கிய 6 ஏக்கர் புதிய நிலத்தில் புதிய பள்ளிக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான ரிங்கிட் மலேசியா 9 மில்லியன் நிதி, பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிதி திரட்டும் விழாவில் வெற்றிகரமாக திரட்டப்பட்டது.

அதேசமயம் இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சார்பில் ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார்..

இப்போது, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்கள் பள்ளிக்கு நேரில் வருகை தந்து, பிரதமரின் சார்பாக ரிங்கிட் மலேசியா 2 மில்லியன் தொகை பள்ளியின் LPS வங்கிக் கணக்கில் வரவு வைத்து உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கி இருக்கிறார்.

மடானி அரசாங்கம் எப்போதும் இந்திய சமுதாயத்தின் நலம் கருதி பல நல்ல காரியங்களை செய்து வருகிறது.

அதில் ஒன்றுதான் லாபு 4 தோட்டத் தமிழ்ப்பள்ளியும் இடம் பெற்றுள்ளது.

இந்த தருணத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் ஆகியோர் பாராட்டுகுறியவர்கள் என்று அருள் குமார் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles