
செய்தி / படங்கள் : எம்.முருகன்
வள்ளல் ரெங்கசாமி பிள்ளையின் மகள் திருமதி செளந்தரவள்ளி – அமரர் சங்கர் பெரியசாமி தம்பதியரின் புதல்வர் டாக்டர் விக்ரமாதித்தாவுக்கும் சரவணன் – திருமதி உமாதேவி தம்பதியரின் புதல்வி டாக்டர் ஷர்மினிக்கும் இனிய திருமணம் நேற்று கோலாலம்பூர், செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருமதி செளந்தரவள்ளி லோட்டஸ் குழும இயக்குநர் டான்ஸ்ரீ ரெனா.துரைசிங்கத்தின் சகோதரியாவார்.
இத்திருமணத்தில் டான்ஸ்ரீ ரெனா.துரைசிங்கம், டத்தோ ரெனா.ராமலிங்கம், டத்தோ நாகசுந்தரம், ரெனா.நாகராஜன், ரெனா. ரத்தினம் உட்பட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


