26.6 C
Kuala Lumpur
Wednesday, August 19, 2026

Vetri

தாபோங் ஹாஜி RCI காலக்கட்டத்திற்கு அப்பாலும் விசாரணைகள் தொடரலாம் – அன்வார்!

🔥 Views : 2,608
👁 Reading Now : 63

தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) விசாரணைகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மட்டும் வரையறுக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

RCI அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்ட காலத்திற்கு முன்னரும் பின்னரும் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமலாக்க மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் RCI-யில் குறிப்பிடப்பட்ட காலக்கட்டத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. RCI அதற்கான அடிப்படை அமைப்பாக உள்ளது. அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு முன்னும் பின்னும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை,” என்று அன்வார் கூறினார்.

அமலாக்க மற்றும் விசாரணை அமைப்புகள் தற்போது அதற்கேற்ப தங்களது பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாபோங் ஹாஜி தொடர்பான விவகாரங்களில் தேவையான விசாரணைகள், RCI அறிக்கையின் கால வரம்பைத் தாண்டியும் மேற்கொள்ளப்படலாம் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் பிரதமர் விளக்கினார்.

நிதியமைச்சில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles