32.9 C
Kuala Lumpur
Thursday, August 20, 2026

Vetri

மலேசிய திரைப்படத் துறைக்கு புதிய ஆதரவு தளம்; Malaysian Movie Fan Club அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!

🔥 Views : 3,908
👁 Reading Now : 27

மலேசியத் திரைப்படத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், உள்நாட்டு கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவை உருவாக்கும் நோக்கில் Malaysian Movie Fan Club (MMFC) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MKU – Malaysia Kalai Ulagam நிறுவனர் டாக்டர் SP பிரபா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, மலேசியத் திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்ப்பதுடன், உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான வலுவான ஆதரவு தளத்தை உருவாக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

MMFC-யின் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வை Dancing Raja Studios நிறுவனத்தின் நிறுவனர் Dato’ Seri G தொடங்கி வைத்தார். மலேசிய பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு புதிய முயற்சிக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

மலேசிய மூத்த நடிகர் KS Maniam, நடிகர்கள் Vinoshan, Loga Varman, நடிகை Susila மற்றும் Dato’ Seri Josy Nathan உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நிகழ்வில் பங்கேற்று MMFC இயக்கத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மலேசியாவில் உருவாகும் திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்துவதில் திரைப்பட ரசிகர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திரையுலகத்தையும் ரசிகர்களையும் இணைக்கும் தளம்!

MMFC மூலம் திரைப்பட ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறை ஆதரவாளர்கள் ஆகியோரை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், மலேசியத் திரைப்படங்களை ஊக்குவித்தல், புதிய உள்ளூர் திறமைகளை அடையாளம் காணுதல், திரைப்பட வெளியீடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் ஆதரவை அதிகரித்தல், உள்ளூர் படைப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் MMFC முன்னெடுக்கவுள்ளது.

“மலேசியாவில் உருவாகும் திரைப்படங்களுக்கும் நமது உள்ளூர் கலைஞர்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய பலமாக அமையும். மலேசியத் திரைப்படத் துறையை வளர்ப்பதில் ரசிகர்களும் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் என்பதே MMFC-யின் பிரதான நோக்கம்,” என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மலேசிய திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வலுவான ஆதரவை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள Malaysian Movie Fan Club, எதிர்காலத்தில் நாடு முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை ஒன்றிணைக்கும் முக்கிய இயக்கமாக வளர வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles