30.4 C
Kuala Lumpur
Saturday, August 22, 2026

Vetri

புதுக்கோட்டை ஏழைப் பெண்களுக்கு சேலை, பஞ்சாபி உடைகள் வழங்கிய மலேசிய புகைப்படக் கலைஞர் மலையாண்டி

🔥 Views : 4,534
👁 Reading Now : 30

செய்தி / படங்கள்: எம். முருகன்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு சேலைகள் மற்றும் பஞ்சாபி உடைகள் உதவியாக வழங்கப்பட்டன.

மலேசியாவின் மக்கள் ஓசை நாளிதழின் புகைப்படக் கலைஞர் மலையாண்டி இந்த உதவியை வழங்கி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

தேவையுடைய பெண்களுக்கு உதவும் நோக்கில் சேலைகள் மற்றும் பஞ்சாபி உடைகளை வழங்கிய மலையாண்டியின் சமூக சேவைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த உதவியை வழங்கிய மலையாண்டிக்கு யோகேஸ்வரி தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

இதுபோன்ற உதவிகள் கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles