
செய்தி / படங்கள்: எம். முருகன்
ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருக்கோவிலில் வரலட்சுமி விரத திருமாங்கல்ய விளக்கு பூஜை இன்று பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புவான் ஸ்ரீ கோமதி துரைசிங்கம் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த அவரது நண்பர்களும் பூஜையில் பங்கேற்றனர்.
காலை முதல் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமாங்கல்ய விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து அருளாசி பெற்றனர். நிகழ்வு முழுவதும் ஆன்மிகமும் பக்தியும் நிறைந்த சூழல் நிலவியது.




