
அருள்மணி ஆறுமுகம் பிள்ளை இல்ல திருமண நிச்சயதார்த்த விழா, உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மணி ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், தங்கவேலு – தங்கமணி தம்பதியரின் பெயர்த்தியும், பாலசுப்பிரமணி – புவனா தம்பதியரின் மகளுமான தங்கமணி MBA அவர்களுக்கும், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் இராம சிவராமன் – தனலட்சுமி தம்பதியரின் மகன் சிவ வெங்கட்ராமன் BE அவர்களுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில், திருப்பத்தூர் – காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகே வைரவன்பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடைபெற்றது.
இரு குடும்பத்தினரின் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வில் மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு, பெரியோர்களிடம் ஆசிபெற்றனர்.

இவ்விழாவில் முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திருமண வாழ்வில் இணையவுள்ள தங்கமணி – சிவ வெங்கட்ராமன் ஆகியோருக்கு இரு குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் தங்களது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தனர்.



