28.3 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தில் விளக்கு பூஜை; 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

🔥 Views : 4,790
👁 Reading Now : 70

திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் ஆலயத்தில் விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை மற்றும் பெருமாளின் திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்தச் சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் புவான் ஸ்ரீ கோமதி துரைசிங்கம், அவரது மகள் நிஷா மற்றும் வினிஷா தம்பதியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆலயத்தில் நடைபெற்ற விளக்கு பூஜையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்தியுடன் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாங்கல்ய பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

பூஜைகள் நிறைவடைந்த பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து அருளாசி பெற்றனர்.

விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு லோட்டஸ் குடும்பத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளக்கு பூஜை முதல் திருவீதி உலா வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் பக்தி நிறைந்த சூழலில் சிறப்பாக நடைபெற்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles