27.6 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

மலாக்கா சட்டமன்றம் கலைப்பு எப்போது? ‘இன்னும் ஒரு வெள்ளிக்கிழமை’ – அப் ரவுஃப் சூசகம்!

🔥 Views : 2,953
👁 Reading Now : 52

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக, இன்னும் ஒரு வெள்ளிக்கிழமை என்பதைச் சுட்டிக்காட்டி மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவுஃப் யூசோ சூசகமாக தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கான சரியான நேரத்துக்காக காத்திருப்பதாக அவர் கூறினார்.

மலாக்கா சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்று அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். இது இனி ரகசியம் அல்ல. சரியான நேரத்திற்காக காத்திருக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.

சட்டமன்றம் எந்தத் தேதியில் கலைக்கப்படும் என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அப் ரவுஃப், முன்னதாக ‘ஒரு வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமை வரை’ என்ற வகையில் ஒரு குறிப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.

“அந்த காலகட்டத்துக்குள், மலாக்கா மாநில நிர்வாகம் தொடர்பாக நாம் முடிக்க வேண்டிய இன்னும் பல விஷயங்கள் உள்ளன,” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், செய்தியாளர் ஒருவர் ‘இன்னொரு வெள்ளிக்கிழமை’ என்பது குறிப்பிட்ட காலகட்டமா? என்று கேள்வி எழுப்பியபோது, அதுவே அடுத்த அறிகுறியாக இருக்கலாம் என்று அப் ரவுஃப் நகைச்சுவையாக பதிலளித்தார்.

இதனால், மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles