
சிலாங்கூர் அரசாங்கத்தின் Inisiatif Mesra திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பங்களைச் செய்வதில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், செந்தோசா சட்டமன்ற சமூக சேவை அலுவலகத்தில் சிறப்பு உதவி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு, குறிப்பாக முதியோர் மற்றும் OKU (மாற்றுத்திறனாளிகள்) இணையவழி விண்ணப்பங்களைச் செய்வதற்கான உதவியைப் பெற்றனர்.
பலர் இணையவழி விண்ணப்பங்களைச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதை கருத்தில் கொண்டு, விண்ணப்ப செயல்முறையை எளிதாகவும் சுமுகமாகவும் மேற்கொள்ளும் வகையில் அலுவலகத்தில் தேவையான இடவசதியும் உதவியும் வழங்கப்பட்டதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
“யாரும் பின்தங்கக் கூடாது. உதவி தேவைப்படும் மக்கள் இருக்கும் வரை, அவர்களுக்கு உதவுவதற்கான எங்களது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த உதவி நிகழ்ச்சி இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், இதன் மூலம் செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் மேலும் பலர் தேவையான உதவியைப் பெற்று, Inisiatif Mesra திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியைச் சிறப்பாக முன்னெடுக்க உதவிய செந்தோசா சிறப்புப் படையினருக்கும் (Sentosa Special Squad) டாக்டர் குணராஜ் நன்றி தெரிவித்தார்.
“இந்தச் சிறிய முயற்சி செந்தோசாவில் உள்ள மேலும் பல குடும்பங்களுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன். செந்தோசா அக்கறை கொள்கிறது; மக்கள் முதலில்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.



