27.6 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

நஜிப்பின் 50 மில்லியன் பணத்தை பாஸ் உறுப்பினர்களும் செலுத்தலாம்?

🔥 Views : 3,028
👁 Reading Now : 67

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒற்றுமை நிதிக்கு பங்களிப்பது பாஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவு என்று அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிதிக்கு பங்களிக்குமாறு பாஸ் கட்சி தனது உறுப்பினர்களை வலியுறுத்தவில்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

இது உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நீதி என்ற கொள்கையை நிலைநிறுத்துவதன் அடிப்படையில், இந்தத் தொகை திரட்டப்படும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க முடியும் என்பதில் தானும் நம்பிக்கையுடன் இருப்பதாக துவான் இப்ராஹிம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles