33.5 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

கோழிப்பண்ணையால் துர்நாற்றம், ஈக்கள் தொல்லை – குளத்துவேல்பட்டி மக்கள் முதல்வரிடம் கோரிக்கை

🔥 Views : 1,227
👁 Reading Now : 30

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சாக்கோட்டை ஒன்றியம், சிறுகபட்டி ஊராட்சிக்குட்பட்ட குளத்துவேல்பட்டி கிராமத்தில் கோழிப்பண்ணையால் துர்நாற்றம் மற்றும் ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் கூறுகையில், தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதிக அளவில் ஈக்கள் பெருகி வருவதாக தெரிவித்தனர்.

மேலும், கோழிக் கழிவுகள் சாக்கடைப் பகுதிகளில் வந்து சேர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வீடுகள் முழுவதும் ஈக்கள் வந்து கொண்டிருக்கின்றன. கோழிப்பண்ணையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தாங்கள் அமைதியான முறையில் கோரிக்கை வைத்தபோதும், காவல்துறையினர் தங்களை கைது செய்து ஒரு நாள் வைத்திருந்த பின்னர் விடுவித்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடமும், முன்னாள் அமைச்சர்களிடமும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களிடமும் முறையிட்டதாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனால், தங்களது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு தமிழக முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் அவர்களே, எங்கள் கிராமத்தை காப்பாற்றுங்கள். உங்களால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு வழங்க முடியும். எங்கள் கிராம மக்களின் துயரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles