25.2 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

கம்பி திருட்டில் ஈடுபட்ட வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதாக வெளியான தகவல் தவறானது – போலீஸ் மறுப்பு

🔥 Views : 2,340
👁 Reading Now : 33

அம்பாங் பகுதியில் திருடப்பட்ட கேபிள்களை ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்திற்கு போலீஸ் ரோந்து வாகனம் பாதுகாப்பாகச் சென்றதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை போலீஸ் மறுத்துள்ளது.

புக்கிட் அமான் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநர் நூர் ஹிஷாம் நோர்டின், கேபிள் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

திருடர்களுடன் போலீசார் கூட்டுச் சேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. ஆம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே போலீஸ் ரோந்து வாகனம் நடவடிக்கை எடுத்தது. மேலும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி அதன் எச்சரிக்கை விளக்கு (beacon) இயக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையிலேயே நடமாடும் ரோந்து வாகனம் சம்பவ இடத்துக்குச் சென்றதாக நூர் ஹிஷாம் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஒரு கேபிள் திருட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலித் நேற்று கூறுகையில், ஆம்பாங், கம்போங் தாசிக் தம்பஹான் பகுதியில் உள்ள ஒரு ஆள்நுழைவு குழியிலிருந்து (manhole) கேபிளை நான்கு சக்கர வாகனம் மூலம் இழுத்துச் செல்ல முயன்ற ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கம்போங் தாசிக் தம்பஹான், மஸ்ஜித் அல்-உபுதியா அருகே ஒரு குழுவினர் கேபிள்களைத் திருடுவதாக சந்தேகிக்கப்படுவதாக அதிகாலை 3.59 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கேபிள் திருட்டு மற்றும் நாசவேலை தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் 379, 431A மற்றும் 124K பிரிவுகளின் கீழும், நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233ஆவது பிரிவின் கீழும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக கைருல் அனுவார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles