28.4 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

ஸ்பெயின் பேட்மிண்டன் போட்டியில் கிஷோனா செல்வதுரை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை

🔥 Views : 55
👁 Reading Now : 35

மலேசியாவின் தலை சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனா செல்வதுரை இன்று ஸ்பெயின் அனைத்துலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற சீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிஷோனா செல்லதுரை கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பட்டத்தையும் வெல்லவில்லை.
நோய்த்தொற்று தாக்கத்தினால் பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயினில் நடந்த அனைத்துலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் அவர் பங்கேற்றார்.
இன்றிரவு நடைபெற்ற பரபரப்பான இறுதியாட்டத்தில் கிஷோனா செல்வதுரை 21 -14, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் மலேசியாவின் மற்றொரு வீராங்கனையான கோ ஜின் வெயை நேரடி செட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles