28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

அமைச்சர் கைரியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

தடுப்பூசியை விநியோகிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதிக்கம் செலுத்துவதாக மலேசியாவின் தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டதை இதுவரை நடந்த சம்பவங்கள் நிரூபிப்பதால் கைரியின் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக மலேசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் மிஷல் ரோக்கஸ் கூறினார்.
மலேசியாவுக்கான தடுப்பூசி விநியோகம் தொடர்பில் நாடு செய்து கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றிய செயலகம் எந்த பிரச்னையுமின்றி அங்கீகரித்தது என்பதை உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கோவாக்ஸ் எனப்படும் உலகலாவிய கோவிட்-19 விநியோகத் திட்டத்தின் கீழ் மலேசியாவுக்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles