
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி
அளவு இன்னும் குறைவாகவே உள்ளது என்று சிலாங்கூர் மாநில கோவிட் தடுப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி தெரிவித்தார்.
இம்மாதம் 20ஆம் தேதி வரை சிலாங்கூரில் 17,15 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதே சமயம் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த பத்து நாட்களில் நோய்த் தொற்றினால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்விகாரம் தொடர்பில், மேன்மை தங்கிய சுல்தான் அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி நடவடிக்கை மன்றத்தை சாடியிருந்த போதிலும் சிலாங்கூர் மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
