27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

இஷாமூடின் புதிய பிரதமரா?கடிதம் போலியானது!

நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் வகையில் மாமன்னருக்கு டத்தோஸ்ரீ இஷாமுடின் கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் போலியானது.கெட்ட நோக்கத்தை கொண்டது என்று டத்தோஸ்ரீ இஷுமுடின் தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.
மக்களை குழப்பும் வகையில் இந்த போலி கடிதம் அமைந்துள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க டத்தோஸ்ரீ இஷாமுடினுக்கு 20 தேசிய முன்னணி உறுப்பினர்கள் ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இஷாமுடின் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆலோசகர்களாக இருப்பார்கள் என்றும் பெரிகாத்தான் நேஷனல், வாரிசான் மற்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர்
சைட் சாடிக் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் துணை பிரதமராக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles