26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஜொகூர் மாநிலத்திற்கு குறைவான தடுப்பூசிகள்; சுல்தான் இப்ராஹிம் வேதனை!

🔥 Views : 10
👁 Reading Now : 50

ஜொகூர் மாநிலத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் குறைவாக இருப்பதால் சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவரை ஜொகூர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.
ஆகவே மத்திய அரசாங்கம் விரைந்து கூடுதல் தடுப்பூசிகளை வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னர் சிலாங்கூர் மாநில சுல்தானும் தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநிலத்திற்கு 29 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மறுத்தது.
வெறும் 615,210 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டதாக சிலாங்கூர் அரசு உறுதி அளித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles