27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

25 எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டோனா? கட்டுக்கதை -அம்னோ தலைவர் பதிலடி

🔥 Views : 8
👁 Reading Now : 56

அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி 25 எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டார் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி தெரிவித்திருப்பது வெறும் கட்டுக்கதையாகும்.
நஸ்ரின் கூற்று ஒரு கட்டுக்கதை. நான் யாருடைய எம்பிக்களின் ஆதரவு இழக்கவில்லை என்று டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி பதிலடி கொடுத்தார்.
தேசிய முன்னணியின் (42 எம்.பி.க்களில், பெரும்பான்மையினர் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் ஆஜராக, செம்புரோங் எம்.பி.யும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஸ்ரீ இஷாமுடின் அழைக்கப்பட்டால் அவருக்கு ஆதரவாக ’25 பி.என். எம்.பி.க்கள் பிரமாணப் பத்திரம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதுபற்றி இன்று கருத்துரைத்த டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, நான் யாருடைய ஆதரவை யும் இழக்கவில்லை என்றும் நஸ்ரி கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை யாகும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles