25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மலேசியாவுக்கு பத்து லட்சம் தடுப்பூசிகள்! ஜப்பான் அரசு அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 27

மலேசியாவில் நோய்த்தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் பத்து லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை வழங்க முன் வந்துள்ளது.
ஆசியான் நாடுகளான
மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுக்கு தலா பத்து லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோதேகி இன்று அறிவித்தார்.
தைவான் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக தலா பத்து லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
கோவாக்ஸ் எனப்படும் உலகலாவிய தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் கீழ் வரும் ஜூலை மாதம் தொடங்கி தென்கிழக்காசியா, தென்மேற்காசியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு ஜப்பான் ஒரு கோடியே பத்து லட்சம் தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles