25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

ஜொகூர் புக்கிட் பாசிர் தொகுதி மக்களுக்கு கெஅடிலான் பேருதவி

🔥 Views : 9
👁 Reading Now : 48

ஜொகூர் மாநிலத்தில் புக்கிட் பாசிர்
சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளரும், பாகோ தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான சுப்ரமணி தலைமையில் புக்கிட் பாசிரில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கப் பட்டது. இவர்களில் பெரும்பாலோர் தோட்டத் தொழிலாளர்களும் சிறு தொழில் வியாபாரிகளும் ஆவார்.
சாமான்ய மக்கள் பலரும் தங்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இன்னும் சிலர் வேலை நிறுத்தம், ஊதியம் கட்டுப்பாடு போன்ற சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது’.
அவர்களின் குறைகளைத் தீர்க்கவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பாகோ தொகுதி மக்கள் நீதிக் கட்சி எப்பொழுதும் பாடுபடும் என தலைவர் சுப்ரமணி கூறினார்.
பாகோ தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் இந்த இலவச உணவு திட்டம் கட்டாயம் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles