30.3 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தடுப்பூசி விவகாரத்தில் பொதுமக்களின் உயிரை பணயம் வைக்காதீர்!

🔥 Views : 9
👁 Reading Now : 58

covid-19 காரணத்தால் மூன்றாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு தொடங்கப்பட்டு நான்காவது வாரத்தை தொட்டு விட்டோம். இருந்தபோதிலும் இன்று கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5812 ஆக பதிவாகியுள்ளது. இன்று மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 82 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகி இருந்தாலும் இதுவரை நாட்டில் 47 லட்சம் பேருக்கு மட்டும்தான் முதற்கட்ட தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி போடப்படும் நடவடிக்கையின் மிகப்பெரிய பலவீனத்தை குறிக்கிறது இதனால் மக்களின் உயிர்களே பனையம் வைக்கப்படுகின்றன என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குண ராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது கோவில் தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி இந்த தடுப்பூசி போடப்படும் நடவடிக்கை தனியாருக்கும் வழங்கப்படும். எனவே அவசரமாக ஊசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தனியார் மருத்துவ மையங்களில் அந்த தடுப்பூசியை பெறலாம். அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும் என்று கைறி ஜமாலுடின் அறிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசி விவகாரத்தில் அரசாங்கம் நாட்டில் இருக்கின்ற அரசு சாரா இயக்கங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் என்றும் குண ராஜ் வலியுறுத்தினார். அப்படி செய்தால் மட்டுமே 80 விழுக்காடு குடிமக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நாட்டில் ஏராளமான அரசு சாரா இயக்கங்கள் இருக்கின்றன அதோடு மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களும் இருக்கின்றன இவர்கள் இந்த தடுப்பூசிகளை வாங்கி பொதுமக்கள் அதைப் பெறுவதற்கான ஆவணங்களை செய்வதற்கு தயாராக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் சற்று கவனம் செலுத்த வேண்டும் இதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கூடிய விரைவில் எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு இது மிகச்சிறந்த செயல் வடிவமாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொரிக்கதான் நேஷனல் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பின்னடைவை கண்டுவருகிறது என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். மக்களின் உயிரை பனையம்வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இதற்கு விரைவில் தீர்வு கொடுக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles