26.4 C
Kuala Lumpur
Wednesday, June 3, 2026

Vetri

கப்பலில் மோதிய படகு கவிழ்ந்ததில் 26 பேர் பலி!

🔥 Views : 5
👁 Reading Now : 47

வங்கதேசத்தில், மணல் ஏற்றிச்சென்ற கப்பலில் மோதி படகு கவிழ்ந்ததால், 26 பேர் பலியாயினர்.

நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் தாகாவில், பங்களா பஜார் பகுதியில், பத்மா ஆற்றின் படித்துறையில் இருந்து, நேற்று ஒரு படகு பயணியருடன் புறப்பட்டது. முறையான பயிற்சி பெறாத ஒரு சிறுவன், படகை ஓட்டிச்சென்றதாக தெரிகிறது.அளவுக்கு அதிகமான பயணியருடன், மிக வேகமாகச் சென்ற படகு, ஆற்றின் நடுப்பகுதியில், மணல் ஏற்றிச்சென்ற கப்பல் மீது மோதி கவிழ்ந்தது. இதில், 26 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர், உயிருக்கு போராடிய ஐந்து பேர் மற்றும் பலியானோர் உடல்களை மீட்டனர். படகில் பயணித்தோர் எண்ணிக்கை உறுதியாக தெரியாததால், தேடுதல் பணிகள் தொடர்வதாக, அதிகாரிகள் கூறினர்.3 பேர் பலிவட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு, பலரும் சட்டவிரோதமாக கடல் வழியாக ஊடுருவுகின்றனர்.

இவர்களை படகு களில் ஏற்றிச்செல்வதை, சிலர் தொழிலாக செய்கின்றனர். இதுபோல், நேற்று முன்தினம் மெக்சிகோவில் இருந்து புறப்பட்ட ஒரு படகு, கலிபோர்னியா மாகாணத் தின் சான் டியாகோ கடற்பகுதியில் திடீரென கவிழ்ந்தது; இதில் மூவர் பலிஆயினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles