29.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இல்லத்தில் அமைச்சர்கள், சட்டத்துறைத் தலைவர்

🔥 Views : 22
👁 Reading Now : 65

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வது என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுத்ததை தொடர்ந்து நாட்டில் அரசியல் நிலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று காலையில் 9.40 மணிக்கு சட்டத்துறை தலைவர் உட்பட அமைச்சர்கள் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இல்லத்திற்கு விரைந்தனர் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும் சில அமைச்சர்களும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இல்லத்திற்கு தற்போது வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
பிரதமரின் வீட்டின் வாசலில் தற்போது ஊடகவியாளர்கள் அதிகளவில் கூடியிருக்கிறார்கள்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles