31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

நடக்கும் சக்தியை இழந்த சசிகுமாருக்கு குளுவாங் ராமன் உதவி

ஜொகூர் மாநிலத்தில் மெங்கிபோல் சட்ட மன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் குளுவாங் தொகுதி ம இ கா தலைவர் கோ. இராமன் ஏழை மக்களுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறார்.
சரஸ்வதி மற்றும் கோபால் ஆகியோருடன் இணைந்து அனைத்து இன மக்களுக்கு இவர் சிறப்பான முறையில் சேவைகளை ஆற்றி வருகிறார்.
குளுவாங்கில் தாமான் பெர்துவா(Taman Bertuah) மற்றும் தாமான் செரி ஜெயா (Taman Seri Jaya) பி40 குடும்பங்களுக்கு சமையல் பொருட்களை வழங்கினார்.
மேலும் குளுவாங்கில் தாமான் பெலாங்கியில் (Taman Pelangi) வசிக்கும் சசிகுமாருக்கு பணவுதவி மற்றும் கழிவு அகற்ற பெப்பர்ஸ் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், வீட்டின் கூரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர் விபத்துக்குளாகி, அவரால் கைகால்களை அசைக்க முடியாமல் போய்விட்டது.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தை யான சசிகுமார் நடக்கும் சக்தியையும் இழந்து விட்டார்.
இவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்கி இருப்பதாக இராமன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles