28.5 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் – இஷாமுடினுக்கு வாழ்த்துக்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 38

அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இஷாமுடின் மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இவ்வளவு நாள் நோய்த்தொற்று திரள் குறித்து பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இனிமேல் இந்த பணிகளை டத்தோஸ்ரீ இஷாமுடின் மேற்கொள்வார் என்று பிரதமர் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே துணை பிரதமராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ இஷாமுடின் முன்னாள் பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
எது எப்படி இருப்பினும் அம்னோவின் உச்சமன்ற முடிவுக்கு காத்திருப்போம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles