28.5 C
Kuala Lumpur
Sunday, June 21, 2026

Vetri

டான்ஸ்ரீ மொகிதீன் ஆதரவை இழந்து விட்டார்!bஆனால் அரசியல்வாதிபோல் சட்டத்துறைத் தலைவர் செயல்படுகிறார்!

🔥 Views : 8
👁 Reading Now : 31

அம்னோ தனது ஆதரவை மீட்டுக் கொண்ட போதிலும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமராக தனது பணியை தொடரலாம் என்று சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் கூறியிருப்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இன்று கடுமையாக சாடியுள்ளனர்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஆதரவை இழந்து விட்டார்.
ஆனால்
சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் ஒரு அரசியல்வாதியை போல் செயல்படுகிறார் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பிரதமராக பதவி ஏற்க கட்சித் தலைவர்கள் மாட்சிமை தங்கிய மாமனாரிடம் எம்பிக்கள் பெயர் பட்டியலை சமர்ப்பித்தனர்.


ஆனால் இன்று மிகப் பெரிய கட்சியான அம்னோ பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளது..
அந்த வகையில் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவை இழந்து விட்டார்.
ஆனால் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் இப்போது ஒரு அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார் என்று அவர்கள் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles