
கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதியுற்று வரும் ஒரு குடும்ப மாதுவான நூர்ஜஹான் அப்துல் லத்தீப் என்பவருக்க பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உதவிகளை வழங்கினார்.
அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்,உணவுக் கூடை மற்றும் அன்றாட செலவிற்காக பண உதவியையும் செய்தார்.
தற்போது அந்த குடும்ப மாதுவின் உடல்நிலை குன்றியிருப்பதாக தெரிவித்த ஆ.குமரேசன், ஆறு பிள்ளைகளுக்கு தாயான அவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமூகநல இலாகா,இஸ்லாம் சமய மன்றத்துடனும் தொடர்புக் கொண்டு உதவிகளை கோரியிருப்பதாக சொன்னார்.
தற்போது கணவரும், 34 வயது மகளும் நூர்ஜஹானை கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.



