31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அம்னோவில் உட்பூசல் தொடர்ந்து மோசமடைகிறது

🔥 Views : 6
👁 Reading Now : 66

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான அரசுக்கு வழங்கி ஆதரவை அம்னோ மீட்டுக் கொள்வதாக ஜூலை 7ஆம் தேதி டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பை செய்தார்.
இருப்பினும் அம்னோவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்ளும்படி அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த உத்தரவை பெரும்பாலான உச்சமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார்.
ஆதரவை மீட்டுக்கொள்ளும் விவகாரம் தொடர்பில் நான் உட்பட பல உச்சமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுத்தோம். அரசியல் விளையாட்டுக்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று நாங்கள் கூறினோம் என்றார் அவர்.
அம்னோ எம்பிக்களான டான்ஸ்ரீ அனுவார் மூசா மற்றும் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் ஆகியோரும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டேன்.
இருப்பினும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவுக்கு டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ அஸ்லினா, டத்தோ அமாட் மஸ்லான், கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் ரம்லி முகமட் நோர் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பகாங் மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ வான் ரூஸ்டி கூறுகையில் அம்னோ உச்ச மன்றத்தில் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அறிவித்தார்.
அம்னோ வசம் 38 எம்பிக்கள் உள்ளனர்.
தற்போது டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் கூடுதலாக 4 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.
அந்த வகையில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles