31.7 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

பிறை தெலுக் இண்டா குடியிருப்பாளர்களுக்கு 8 லட்சத்து 60 வெள்ளியில் புதிய லிப்டுகள்

🔥 Views : 18
👁 Reading Now : 70

பினாங்கு மாநிலத்தின் பிறை தெலுக் இண்டா அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் மின்படிகள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பிறந்துள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பின் இ1 மற்றும் இ 2 புளோக்கில் அடிக்கடி பழுதாகி நிற்கும் இரண்டு மின்படிகள் சீரமைப்புக்கு 8 லட்சத்துக்கு 60 வெள்ளியில் மின்படிகள் பொருத்தும் பணிகள் விரைவில் நிறைவுப் பெறும் என்று பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு இப்பணிகள் செய்து முடிக்கப்படும்.
.மேலும் இங்கு நிலவி வரும் மற்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென கூறிய அவர்,இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு நிர்வாக நிறுவனத்தையும் நியமித்துள்ளதாக டாக்டர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.
பிகேபி அமலாக்கம் முடிவுக்கு வந்தப் பின்னர்,செபராங் பிறை மாநகர் மன்றம் மற்றும் குடியிருப்பின் நடவடிக்கைக் குழுவும் அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles