
ஜொகூர் கெம்பாஸ்,இம்பியான் இமாஸ் என்ற இடத்தில் தமிழ்ப்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்ட நில விவகாரம் தொடர்பில் ஜொகூர் மாநில மஇகா மௌனம் சாதிப்பது ஏன் என்று சந்திர சேகரன் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்
ஜொகூர் ஜசெகவைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆறுமுகம் சில தினங்களுக்கு முன்பு அந்த நிலம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார் என்பது கூறிப்பிடதக்கது.
அந்த கெம்பாஸ், இம்பியான் இம்மாஸ் தமிழ்பள்ளிக்கு அடையாளம் காணப்பட்ட நிலையில் ஜொகூர் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் .ர.வித்யானந்தன் பதிலுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை திரு.வித்தியானத்தன் நினைவில் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
அந்த நில விவகாரம் குறித்து ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நித்தியானந்தன் மற்றும் ம இகா பொறுப்பாளர்கள் இன்று வரை தங்களது மவுனத்தை களையமால் இருப்பது அந்த நிலம் இருப்பது உண்மை என இங்கே புரிகிறது.
மேலும்,தன் மீது அவதூறு கூறிய ஜொகூர் மாநில மஇக துனை தலைவர் திரு சுப்பையா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்தோடு,தன்னை பொய்யர் என்று வர்னித்த திரு சுப்பையா மீது வழக்கு தொடுக்க போவதாக திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.



